Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வார்னர் இல்லாமல் ஜொலிக்குமா ஹைதராபாத்? சன்ரைசர்ஸ் டீம் எப்படி இருக்கு? #IPL2018

தலைவனை இழந்த கையோடு இந்த வருட ஐபிஎல்- லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கவுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தமட்டில் ஐபிஎல் சரவெடியில் எப்போதும் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் தனி ஒருவனாகத் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடியவர்கள். வெறும் டேவிட் வார்னரின் அதிரடி ஓபனிங் பேட்டிங்கை கொண்டே பல வெற்றிகளைக் குவித்துள்ளனர்.டேவிட் வார்னரைப் பொறுத்தமட்டில் பவர் பிளேயில் தொடங்கி இறுதிவரை மிரட்டுவது மட்டுமல்லாமல் அணியின் பாதி ரன்களை இவரே அடித்து பட்டையை கிளப்பிக்கொண்டிருப்பார். கேப்டன் என்ற சுமையை மறந்து அட்டகாசபடுத்துவார். லீக் சுற்றிலேயே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேறினாலும் ஆரஞ்சு நிற தொப்பியைத் தட்டிச் சென்று விடுவார். அந்த அளவுக்கு ரன் வேட்டை நடத்தக்கூடியவர். 2016 ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். இதே போல் ஃபீல்டிங்கிலும் அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடிக்கக் கூடிய திறமையான வீரர். பால் டேம்பரிங் தடையால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வார்னரை இழந்துள்ளார்கள் என்பதை விட அணியின் 50% சதவிகிதம் வெற்றியை இழந்துள்ளார்கள் என்பதே உண்மை.

சன்ரைசர்ஸ்

ஏனெனில் லெஃப்ட் - லெஃப்ட் காம்பினேஷனில் வெளுத்து வாங்கும் ஒரே அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டும்தான். வார்னருக்குப் பதிலாக வந்துள்ள இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 20/20 ஸ்பெசலிஸ்ட்தான். 20/20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஒரே இங்கிலாந்து வீரராக இருந்தாலும் ஐபிஎல்-லில் இதுவரை போதிய அனுபவம் இல்லை. அது மட்டுமல்லாது கேப்டன் வில்லியம்சன் ஓபனிங் இறங்கும் கோதாவில் குதித்தால் ஹேல்ஸ் இறங்குவது கடினம்.

பேட்டிங்கைப் பொறுத்த வரையில் வார்னர் தவிர்த்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சற்று நல்ல நிலையிலேயே காணப்படுகிறது. கேப்டன் வில்லியம்சன், ஷிகர் தவான், மணிஷ் பாண்டே,விரித்திமான் சஹா, தீபக் ஹூடா, யூசஃப் பதான், ஷகிப் அல் ஹசன் என வரிந்து கட்டி நிற்கிறார்கள். ஷிகர் தவான் நிலைத்து நின்று அதிரடி காட்டக் கூடியவர். அவ்வளவு சீக்கிரம் விக்கெட்டை இழந்து விட மாட்டார்.
இதேபோல் வில்லியம்சன் லேட்டஸ்ட் `லேட் கட்டர்' பேட்ஸ்மேன் எனப் புகழப்படுபவர். ஏற்கெனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடியுள்ளதால் கேப்டனாகச் சிறப்பாகச் செயல்படுவார். ஓபனிங் அல்லது மிடில் ஆர்டரில் எங்கு விளையாடுவர் என்பதில் மட்டும் குழப்பமாக உள்ளது.

மனிஷ் பாண்டே ஐபிஎல்-லில் எப்போதும் ஸ்டாண்டர்டு பெர்ஃபாமர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடும் போது நெருக்கடியான ஓவர்களை வெளுத்து வாங்கி வெற்றி பெற வைத்துள்ளார். ஆனால், சமீப காலமாக பேட்டிங்கில் பந்துகளை விரயம் செய்து தடுமாறி வருகிறார். இந்திய அணிக்காக ஆடும் போது களத்தில் தன்னை நிலைநிறுத்தவே 20 பந்துகளை எடுத்துக்கொள்கிறார். இதனால் இந்த வருடம் எப்படிச் செயல்பட போகிறார் எனத் தெரியவில்லை.

sunrisers

விரித்திமான் சஹா சிறந்த விக்கெட் கீப்பர் மட்டுமன்றி ஐபிஎல் தொடரில் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் ஆடியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சதம் விளாசியது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த உள்ளூர் கிளப் போட்டியில் 20 பந்துகளில் சதம் நொறுக்கி பிரம்மிக்க வைத்துள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 5 சீசன்களில் இதுவரை ஒரு சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை ஆடும் லெவலில் எடுத்ததே இல்லை. நமன் ஓஜாவை வைத்தே காலத்தைக் கடத்தி விட்டனர். இந்தக் குறையைப் போக்கும் நல்ல ஆப்சனாக சஹா இருப்பார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் ஓபனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையாமல் தொடர்ச்சியாக  விக்கெட்டுகளை இழந்தால் 5 வது 6 வது விக்கெட்டுகளுக்கு இறங்கும் வீரர்கள் தூக்கி நிறுத்துவர். அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சரியான பேட்ஸ்மேன்கள் இன்றி தவிக்கிறது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் தொடக்க ஜோடியாக இறங்கினால், வில்லியம்சன், மனிஷ் பாண்டே, அடுத்தடுத்து இறங்குவார்கள், அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு தீபக் ஹூடா, சஹீப் அல் ஹசன், பிராத்வெய்ட்,யுசஃப் பதான், கிறிஸ் ஜோர்டான் என இருக்கிறார்கள். சாஹிப் அல் ஹசன் 20/20கிரிக்கெட்டின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர். பேட்டிங் மட்டுமன்றி நான்கு ஓவர் ஸ்பின் வீசக்கூடிய சிறந்த ஸ்பின்னர்.

சன்ரைசர்ஸ்

இதர ஆல் ரவுண்டர்களான பிராத்வெய்ட் 20 ஓவர் உலககோப்பை பைனலுக்குப் பிறகு அவ்வளவாக பெர்ஃபாமன்ஸ் செய்தது இல்லை. யூசுஃப் பதானும் 10 வருட ஐபிஎல்-லில் அதிகபட்சம் ஒரு 10 ஆட்டங்களில் மட்டுமே ஜொலித்திருப்பார். அதிரடி பேட்ஸ்மேன் என்றாலும் எப்பொழுது விக்கெட்டை இழப்பார் எனத் தெரியாது. இவரது ஆஃப் ஸ்பின்னும் அவ்வளவாக எடுபடுவது இல்லை.
தீபக் ஹூடா கடந்த சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பெட்டராக பெர்பாமன்ஸ் செய்தவர்.ஆஃப் பிரேக் பேட்டிங் என எமர்ஜிங் யங் பிளேயராகக் கெத்துக் காட்டினார். சமீப காலமாக இந்திய அணிக்காக ஆடும் லெவனில் இடமின்றி பெஞ்ச்சில் உக்கார்ந்திருந்தார். இதனால் இவரது ஆட்டத்தைக் கான சற்று ஆவலாகவே உள்ளது.

பவுலிங்கைப் பொறுத்தவரையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் ஸ்விங்கும், சொடக்கும் எனக் கதகளி ஆடுவர். உலகின் நம்பர் ஒன் பவுலர்களான புவியும், ரஷீத் கானும் எட்டு ஓவர்களை எக்கனாமி ரேட் இல்லாமல் கூட செய்துவிடுவார்கள். அந்த அளவுக்குத் தாக்குதல் கொடுப்பர். புவனேஷ்வர் குமார் ஆட்டத்தின் முதல்பந்திலிருந்தே விக்கெட் கணக்கை தொடங்கி வைப்பார். டெத் ஓவர்களில் கெத்துக் காட்டுவார். 2016, 2017 சீசன்களில் அதிக விக்கெட்டுகளைச் சாய்த்து ஊதா நிற தொப்பியைத் தட்டிச் சென்றவரல்லவா!

சன்ரைசர்ஸ்

இவருக்குப் பக்கபலமாக இருந்த நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட்,மற்றும் முஸ்தாபிஜூர் ரஹ்மானை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீச புவனேஷ்வர் குமாருக்குச் சரியான பார்ட்னர் இல்லை. மற்றபடி புவனேஷ்வர் குமாருடன் இணைந்து சென்ற ஆண்டு கலக்கிய சித்தார்த் கவுல் மற்றும்  பஷில் தம்பி, சந்தீப் ஷர்மா வேகத்தில் மிரட்டவுள்ளனர்.

பசில் தம்பி கடந்த சீசனில் லீடிங் விக்கெட் லிஸ்ட்டில் வந்தவர். சந்தீப் சர்மாவும் புவனேஷ் குமாருக்கு ஈடாக ஸ்விங் தாக்குதல் தொடுப்பவர். பவுலிங்கில்‌ 95 சதவிகிதம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வலுவாகவே உள்ளது. ஆடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களை மட்டுமே சேர்க்க முடியுமென்பதால் ஆஃப்கானிஸ்தானின் முஹம்மது நபி மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேன்லேக் வாய்ப்பு பெறுவது சிரமம்.

சன்ரைசர்ஸ்

மொத்தத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிடில் ஆர்டரில் மட்டும் சற்று சொதப்புவார்கள் எனத் தெரிகிறது. ஆரஞ்சு கேப் பர்ப்பில் கேப் எல்லா இரண்டிற்கும் பேட்டர்ன் வாங்கி உள்ளதை போல் செயல்படும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  இந்த வருடம் தடைகளை உடைத்து வெற்றிவாகை சூடுவார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement