வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (10/04/2018)

கடைசி தொடர்பு:14:15 (10/04/2018)

27 பந்துகளில் நோ பவுண்டரி... மிரட்டல் பெளலிங் யூனிட்... ஹைதராபாத் வென்றது எப்படி?! #SRHvRR

இந்தியாவுக்கு எதிராக லிமிட்டெட் ஓவர்களில் வெளுத்துக் கட்டிய கிளாசனை பிளேயிங் லெவனில் இறக்காதது, ஸ்லிப்பில் ரகானே கேட்ச்சை விட்டது என ராஜஸ்தான் தோல்விக்குப் பல காரணங்களை அடுக்கலாம். ஒட்டுமொத்தமாக அவர்கள் அணியை ஓவராயில் பார்க்க வேண்டிய நேரம் இது!

27 பந்துகளில் நோ பவுண்டரி... மிரட்டல் பெளலிங் யூனிட்... ஹைதராபாத் வென்றது எப்படி?! #SRHvRR

டி-20 பேட்ஸ்மேன்களுக்கான கேம். அதை பெளலர்களைக் கொண்டு வெல்வது சாதனை. 11-வது ஐ.பி.எல் சீசனின் நான்காவது போட்டியில் அந்தச் சாதனையைச் செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முழுக்கமுழுக்க பக்காவான பெளலிங் யூனிட்டை வைத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ். #SRHvRR

இந்தப் போட்டியில் ஷிகர் தவன் சேஸிங்கில் அரைசதம் அடித்தது பெரிய விஷயமில்லை. ஏனெனில், முதல் மூன்று போட்டிகளிலேயே அதிவேக அரைசதங்களை, இமாலய சிக்ஸர்களை, த்ரில்லிங் சேஸ்களைப் பார்த்துவிட்டனர் ஐ.பி.எல் ரசிகர்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு தவன் - வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்ததும் பெரிய விஷயமில்லை. பின்னே... எப்போதும் போல, இப்போதும் ஹைதராபாத்தின் பெளலிங் யுனிட்தான் பாராட்டுக்குரியது. பிளேயிங் லெவனில் இடம்பிடித்த புவி, ஸ்டேன்லேக், ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகிய ஐந்து பெளலர்களும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டல்!

SRHvRR

எந்தவொரு அணிக்கும் புவனேஸ்வர்குமார் கீ பெளலர். அவர் பந்தில் சஞ்சு சாம்சன் இரண்டு பவுண்டரிகள் அடித்ததுமே சுதாரித்த வில்லியம்சன், ஷகிப் அல் ஹசனைக் கொண்டு வந்தார். இப்போதெல்லாம் பவர் பிளேவில் பிரைமரி ஸ்பின்னர்களைக் கொண்டு ரன்களைக் கட்டுப்படுத்துவதுதான் டி-20 போட்டியின் சிறந்த டெக்னிக். ஸ்டேன்லேக் ஓவரில் சாம்சன், ரகானே இருவரும் மாறிமாறி பவுண்டரி அடித்தபோது ராஜஸ்தான் ரன் ரேட் எட்டைத் தொட்டது. ஷகிப் வீசிய ஆறாவது ஓவரிலும் எட்டு ரன்கள் வந்தது என்றாலும், பவர் பிளேவில் அவர் 2 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததும், அதில் 5 டாட் பால்களை வீசியதும் கவனிக்கத்தக்கது. டி-20-யில் வீணடிக்கப்படும் ஒவ்வொரு டாட் பாலும் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஷகிப் முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஒருவித நெருக்கடியைக் கொடுத்தார். பெரிய ஷாட் ஆடுவதற்கான உந்துதலைக் கொடுத்தார்.

சித்தார்த் கவுல் வீசிய 7-வது ஓவரில் ரகானே ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்றார்.  டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். முந்தைய பந்தில் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த ஸ்டேன்லேக் செய்த தவற்றை ரஷித் கான்  செய்யவில்லை. அழகான கேட்ச். ரகானே 13 ரன்களில் அவுட். மிடில் ஓவர்களில் ஸ்டேன்லேக், சித்தார்த் கவுல், ரஷித் கான் ரன்களைக் கட்டுப்படுத்தினர். மிடில் ஓவர்களில் 27 பந்துகளில் ராஜஸ்தான் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ஆரம்பத்தில் வெளுத்துக்கட்டிய சஞ்சு சாம்சன், ஸ்ட்ரைக் ரேட் அதிகம் வைத்திருக்கும் திரிபாதி இருவரும் எவ்வளவு முயன்றும் பந்து எல்லை தாண்டவில்லை. இவர்கள் இருவரையும், தன் கடைசி ஓவரில் நான்கு பந்து இடைவெளியில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஷகிப். ஆம், வங்கதேச ஆல் ரவுண்டர் வீசியது அட்டகாசமான ஸ்பெல். 4 ஓவர்களில் 23 ரன்கள், 2 விக்கெட் என்பது பிரமிக்கும் எண்கள் இல்லை. ஆனால், ஷகிப் பெளலிங் செய்தது சஞ்சு சாம்சன், ரஹானே, ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் என்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு என்பதுதான் விஷயம். 

SRHvRR

ஸ்பின்னர்களை வைத்து முதல் ஓவரைத் தொடங்கும் இந்தக் காலத்தில், அணியின் பிரைமரி ஸ்பின்னருக்கு எட்டாவது ஓவரில்தான் பந்தைக் கொடுத்தார் வில்லியம்சன். இதற்கும் காரணம் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் - ரஷித் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இந்தப் போட்டிக்கு முன்புவரை ரஷித் வீசிய ஏழு பந்துகளில் இரண்டு முறை அவுட்டாகியிருக்கிறார் ஸ்டோக்ஸ். இந்தமுறையும் அவரிடமே அவுட்டாக வாய்ப்பிருக்கிறது என கணிக்கப்பட்டது. நடந்தது வேறு. ஸ்டேன்லேக் பந்தில் லாங் ஆனில் இருந்த வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் (5) வெளியேறினார். ஆனால், அதற்கு முந்தைய ஓவரில் ரஷித் கான் வீசிய நான்கு பந்துகளைச் சந்தித்த ஸ்டோக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இந்த நெருக்கடி அடுத்த ஓவரில் அவரை பெரிய ஷாட் அடிக்கத் தூண்டியது. ஏற்கெனவே சொன்னதுபோல, டாட் பால் நெருக்கடி மீண்டும் கைகொடுத்தது.

ஷகிப், ரஷித் தவிர்த்து ஸ்டேன்லேக் 29 ரன்களுக்கு 1 விக்கெட், சித்தார்த் 17 ரன்களுக்கு 2 விக்கெட், புவி ஒரு விக்கெட் என சன்ரைசர்ஸின் எல்லா பெளலர்களும் பாஸ் எனில், சந்தீப் சர்மா, பாசில் தம்பி என பெஞ்ச் பெளலிங்கும் அவ்வளவு ஸ்ட்ரென்த்தாக இருக்கிறது. கேன் வில்லியம்சனின் துல்லிய த்ரோ ரன் அவுட், ரஷித் கானின் அட்டகாச கேட்ச் என ஃபீல்டிங்கிலும் அவர்கள் சோடை போகவில்லை. ஆக, இந்த சீசனிலும் ஹைதராபாத் பெளலிங்கில் மற்ற அணிகளுக்கு தண்ணி காட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. டேவிட் வார்னர் இல்லாத குறையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எளிதாக சமாளித்துவிட்டது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது.

SRHvRR

டாப் ஆர்டரில் வெளுத்துக் கட்டும் திரிபாதிக்கு முன்னதாக சஞ்சு சாம்சனை இறக்கிவிட்டது, பிக்பாஷ் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த ஷார்ட்டின் அவசரம், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் போன்ற சீனியர் பிளேயர்களின் மோசமான பெர்ஃபாமன்ஸ், இந்தியாவுக்கு எதிராக லிமிட்டெட் ஓவர்களில் வெளுத்துக் கட்டிய கிளாசனை பிளேயிங் லெவனில் இறக்காதது, ஸ்லிப்பில் ரகானே கேட்ச்சை விட்டது என ராஜஸ்தான் தோல்விக்குப் பல காரணங்களை அடுக்கலாம். ஒட்டுமொத்தமாக அவர்கள் அணியை ஓவராயில் பார்க்க வேண்டிய நேரம் இது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்