ஐ.பி.எல் போட்டிகளை இடமாற்றம் செய்ய இதுதான் காரணம்..! ராஜிவ் சுக்லா விளக்கம்

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்று ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக ஐ.பி.எல் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, சென்னை - கொல்கத்தா போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கத்தைச் சுற்றிலும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போட்டியின்போது, மைதானத்தின் உள்ளே செருப்பு வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா, 'ஐ.பி.எல் போட்டிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால், போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுகிறது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!