வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (12/04/2018)

கடைசி தொடர்பு:13:59 (12/04/2018)

ஐ.பி.எல் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற அறிவிப்பு..! #IPL

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டிகளைக் காண டிக்கெட் வாங்கிய பார்வையாளர்களுக்கு, ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை டிக்கெட்டுக்குரிய பணம் திரும்ப வழங்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரில், சென்னை அணி மோதும் ஏழு போட்டிகள், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. அதில், கொல்கத்தாவுடன் மோதிய முதல் போட்டி மட்டும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் நடைபெற்றுமுடிந்தது. கடுமையான எதிர்ப்புகளையடுத்து, மற்ற போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்தப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன.

தற்போது, அந்தப் பணத்தைத் திரும்ப வழங்குவதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறவிப்பில், 'விக்டோரியா விடுதி சாலையிலுள்ள பூத் 3-ல் பணம் திரும்ப வழங்கப்படும். ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை மட்டுமே பணம் வழங்கப்படும்.    20-ம் தேதிக்குப் பிறகு பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, ஆன்லைன்மூலம் பணம் திரும்ப செலுத்தப்படும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.