வெளியிடப்பட்ட நேரம்: 09:23 (14/04/2018)

கடைசி தொடர்பு:10:25 (14/04/2018)

குத்துச்சண்டையில் இவர் கில்லி! - காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் # CWG2018

மேரி கோம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

ஐந்து முறை உலகச் சாம்பியனான இந்திய நட்சத்திர குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், அரையிறுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தினார். இலங்கை வீராங்கனை அனுஷா தில்ருஷி மேரி கோமை விடச் சற்று உயரமானவர். அவரின் உயரம் அவருக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், மேரி கோம் அபாரமாக விளையாடி 5-0 என்ற புள்ளிக்கணக்கில் அனுஷாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற 45-48 கிலோ எடைப்பிரிவிற்கான குத்துச் சண்டை இறுதிப்போட்டியில், வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர்கொண்ட மேரிகோம் சிறப்பாக விளையாடி இந்தியாவின் பதக்கப்பட்டியலுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். 

தற்போது 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 169 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 100 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க