மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது சன் ரைஸர்ஸ் அணி..!

5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் வெற்றி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை சன்ரைஸர்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் வரிசையில் இறங்கும் சுனில் நரேன் இம்முறை ஓப்பனிங்ஆடவில்லை. மாறாக ராபின் உத்தப்பா - கிறிஸ் லின் இணை களமிறங்கியது. உத்தப்பா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி தரமறுமுனையில் இருந்த கிறிஸ் லின் ஆறுதல் அளித்தார். அவர் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அதற்கடுத்து வந்தவர்களும்சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஐபிஎல்

139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது சன் ரைஸர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரித்திமான் சஹா மற்றும் ஷிகர் தவான் இந்த மேட்சில் ஜொலிக்கவில்லை. தவான் முதல் ஏழு ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஈடு கொடுத்து ஆடினார் சஹா. ஆனால், அவரும் 24 ரன்களில் அவுட் ஆனார். எனினும் கேன் வில்லியன்சன் அரை சதம் தொட்டு அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து இறங்கிய யூசப் பதான் 17 ரன்கள் அடித்து ஹைதராபாத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மீதம் இருக்க 139 ரன்களை அடித்து ஹைதரபாத் வெற்றிபெற்றது. இது ஹைதரபாத் பெறும் 3-வது வெற்றியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!