நள்ளிரவில் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்..! வைரலாகும் வீடியோ | Sachin tendulkar plays street cricket

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (17/04/2018)

கடைசி தொடர்பு:13:00 (17/04/2018)

நள்ளிரவில் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்..! வைரலாகும் வீடியோ

மும்பை நகரின் சாலையில், நள்ளிரவில் இளைஞர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

உலக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர், சச்சின் டெண்டுல்கர். அவருக்கு, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு, மூன்று தலைமுறையினர் ரசிகர்களாக இருந்துவருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிவிட்ட அவர், தற்போது மும்பை அணியின் சப்போட்டராக இருந்துவருகிறார். நள்ளிரவில், சாலையில் இளைஞர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோ, பந்தரா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பாந்தரா பகுதியில், சாலையோரம் காவல்துறையினர் வைத்திருக்கும் பேரிகாடுகளை ஸ்டெம்பாக வைத்து ஹோட்டலில் வேலைசெய்யும் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அந்த வழியாக காரில் சென்ற சச்சின், காரை நிறுத்தச்சொல்லி, இளைஞர்களுடன் சேர்த்து கிரிக்கெட் விளையாடினர். ஒரு சில பந்துகளை அவர் எதிர்கொள்கிறார். அந்த வழியாக காரில் வந்தவர்கள், இறங்கி அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.