வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (19/04/2018)

கடைசி தொடர்பு:13:15 (19/04/2018)

சிறப்பு ரயில் ஏற்பாடுசெய்த சென்னை சூப்பர் கிங்ஸ்..! புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் போட்டியைக் காண, சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் சி.எஸ்.கே ரசிகர்கள் புனே புறப்பட்டனர்.

ஐபிஎல்-லின் 11-வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இரண்டு வருடம் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-லில் களமிறங்குவதால், தமிழ்நாடு சி.எஸ்.கே-யின் மீது அதிக எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது. சென்னையில் நடைபெறும் போட்டிகளைக் காண தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த போட்டிகள் ரத்துசெய்யப்பட்டன.

அந்தப் போட்டிகள் அனைத்தும் புனே மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் போட்டி, நாளை புனேவில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியைக் காண்பதற்கு 1,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள், மஞ்சள் நிற சென்னை அணி பனியனுடன், சென்னை சென்டரிலிருந்து சிறப்பு ரயில்மூலம் புனேவுக்குப் புறப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். இன்று புறப்படும் ரயில், நாளை காலை புனே சென்றடையும். நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.