வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (19/04/2018)

கடைசி தொடர்பு:21:55 (19/04/2018)

கெயில் அதிரடி சதம்; ஹைதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு!#KXIPvSRH

ஐ.பி.எல் 2018 -ல் 16 லீக் போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி மைதானத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. 

ஐ.பி.எல் கெயில்

Photo: Twitter/ipl

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ராகுல் இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய அகர்வால் அதிரடியாக விளையாடினார். அவர் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

நிதானமாக விளையாடிய கெயில், 10 வது ஓவருக்குப் பிறகு அதிரடியில் களமிறங்கினார். ரஷித் கான் ஓவரில் 4 சிக்சர்கள் பறக்கவிட்டு அசத்தினார் கெயில். அதிரடியாக விளையாடிய கெயில், இந்த சீசனின் முதலாவது சதத்தை அடித்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத கெயில் 63 பந்துகளில் 104 எடுத்தார். இதில் 11 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய பிஞ்ச் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், கவுல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

இறுதியாக 20 முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.