வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (20/04/2018)

கடைசி தொடர்பு:20:04 (20/04/2018)

பிளேயிங் லெவனில் மீண்டும் ரெய்னா, ஹர்பஜனுக்கு ஓய்வு! புனேவில் சென்னை பேட்டிங் #CSKvRR

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன்

சென்னையிலிருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்ட நிலையில், புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் ஆடும் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாகக் கடந்த போட்டியில் விளையாட சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக, கரண் ஷர்மா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ராஜஸ்தான் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவால் குல்கர்னிக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், தொடக்க வீரர் டி ஆர்கி ஷார்ட்டுக்குப் பதிலாகத் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளாசனும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்துக்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் கிளாசன் சேர்க்கப்பட்டிருந்தார்.