வெளுத்து வாங்கிய ராகுல், கெயில்; முதலிடத்தில் பஞ்சாப் அணி! KKRvKXIP | punjab team in top of IPL league table after the win against KKR

வெளியிடப்பட்ட நேரம்: 23:09 (21/04/2018)

கடைசி தொடர்பு:23:09 (21/04/2018)

வெளுத்து வாங்கிய ராகுல், கெயில்; முதலிடத்தில் பஞ்சாப் அணி! KKRvKXIP

கொல்கத்தா  அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்(டி.எல்.எஸ் விதிப்படி) வெற்றிபெற்றது.

பஞ்சாப்

Photo: Twitter/ipl

இன்று மாலை 4 மணிக்குத்  தொடங்கிய ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் மோதியது. டாஸ்வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். நரேன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, லின் மற்றும் உத்தப்பா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். உத்தப்பா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய  லின், 74 ரன்கள் குவித்தார். கேப்டன் தினேஷ் கார்திக் 43 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஸ்ரன், டை தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். 

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக   லோகேஷ் ராகுல் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் இருந்தே அதிரடியில் இறங்கியது பஞ்சாப் அணி. கெயில் விட ராகுல் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்து கொல்கத்தா பந்துவீச்சாளர்களைத்  திணறடித்தார். முதல் 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி  விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்தது. 8.2 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

நீண்ட இடைவேளைக்குப்  பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இப்போது பஞ்சாப் அணிக்கு 13 ஓவர்களில் 125 ரன்கள் (டி.எல்.எஸ் விதிப்படி) தேவை என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்த ராகுல், நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக 11.1 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப். கிறிஸ் கெயில் 62 ரன்கள் எடுத்தார். ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.