`டெல்லி அணி சிறப்பான பந்துவீச்சு!’ - 143 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட பஞ்சாப்

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. 

டெல்லி அணி

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக கெயில் ஓய்வு பெற்றதே பஞ்சாபுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கெயிலுக்கு பதிலாக டேவிட் மில்லர் களமிறங்கினார் . கம்பீரும், பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் இணைந்து டெல்லி அணியை முற்றிலுமாக மாற்றி இருந்தனர்.  ஐந்து போட்டிகள் விளையாடி, ஒரு வெற்றி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கும் டெல்லிக்கு அதிரடி மாற்றங்கள் இன்றைக்கு கை கொடுத்தது என்றே சொல்லலாம். ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா, பிளங்கட், ப்ருத்வி ஷா என  நான்கு மாற்றங்களுடன் பந்து வீச தயாரானது டெல்லி. கெயிலுக்கு பதிலாக ஓப்பனராக களமிறங்கிய பின்ச், அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. ஆவேஷ் கான் பந்தில் 2 ரன்களுக்கு அவர் அவுட்டானார். ராகுலுடன் ஜோடி சேர்ந்து மயாங்க் அகர்வால் சிறிதுநேரம் வானவேடிக்கை நிகழ்த்தினாலும், அது அதிக நேரம் நீடிக்கவில்லை. ராகுல், மயங்க் ஆகிய இருவரையும் பிளங்கட் அவுட்டாக்க, பஞ்சாப் முழுவதுமாக சரண்டர் ஆனது.  கருண் நாயர் சற்று நேரம் தாக்குப்பிடித்து 34 ரன்கள் சேர்த்தார். ஆனால், அவரது விக்கெட்டையும் அநாயசமாக வீழ்த்தினார் பிளங்கட். கடைசி ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே டெல்லியால் அடிக்க முடிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பிளங்கட் மூன்று விக்கெட்டுகளும், ஆவேஷ் கான், பௌல்ட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!