வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (24/04/2018)

கடைசி தொடர்பு:11:20 (24/04/2018)

‘ஈனா மீனா டீக்கா...’ - இது தோனி வெர்ஷன்! #Viral

தோனி தன் மகளைத் தோள்மீது தூக்கிக்கொண்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஸிவா தோனி
 

ஐ.பி.எல் போட்டியின் 24 வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. இந்த ஐ.பி.எல் தொடரில்  முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று பெங்களூர் வந்திறங்கியது. தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா தன் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். விமான நிலையத்தில் அனைவரது பார்வையும் தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேசியா  மீதுதான் இருந்தது.

ரெய்னா
 

தந்தை மற்றும் தாயின் விரல்கள் பிடித்தபடி கிரேசியா தத்தி தத்தி நடந்து வந்த காட்சி செம்ம க்யூட். ஸிவா தன் தந்தையின்மீது ஏறி உட்கார்ந்து அனைவரையும் வேடிக்கை பார்த்து வந்த காட்சியை ரசிக்காமல் இருக்க முடியாது.

இந்த இரண்டு புகைப்படங்களும்  சி.எஸ்.கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. சி.எஸ்.கே ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கீழ் `தல தோனி’, `சின்ன தல ரெய்னா’, க்யூட், பியூட்டிஃபுல் என வர்ணித்து வருகின்றனர். 

தோனி
 

தோனி ஸிவாவை தோள்மீது தூக்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை, தெறி படத்தில் விஜய், நைனிகாவை தோள்மீது தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்துடன் சேர்த்து வைத்து `ஈனா மீனா டீக்கா...’ என மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

தோனி

இன்னும் சிலர், அஜித் தன் மகளைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்துடன் ஸிவா படத்தை இணைத்து பகிர்ந்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க