'தந்தையாக எனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டேன்!’ - ஸிவா குறித்து நெகிழ்ந்த தோனி | Dhoni posted video in Instagram with her daughter

வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (26/04/2018)

கடைசி தொடர்பு:20:36 (26/04/2018)

'தந்தையாக எனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டேன்!’ - ஸிவா குறித்து நெகிழ்ந்த தோனி

கிரிக்கெட் வீரராகத் தனது பணியை முடித்த தோனி, தற்போது தந்தை பணிக்குத் திரும்பிவிட்டார்.

தோனி

நேற்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். தோனி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக புனேவில் வரும் சனிக்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 

இதற்கிடையில் கூல் கேப்டன் இன்ஸ்டாகிராமில் தனது மகள் ஸிவாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். சமூகவலைதளங்களில் தோனி -ஸிவா பார்ட்னர்ஷிப் எப்போதுமே வைரல்தான். இந்த முறையும் இந்த பார்ட்னர்ஷிப் சொதப்பவில்லை. தோனி பதிவேற்றிய அந்த வீடியோவில், ஹேர் ட்ரையர் மூலம் மகளின் தலைமுடியைக் காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார். அதில், 'ஆட்டம் முடிந்தது, நல்ல தூக்கத்துக்குப் பின்னர், தற்போது மீண்டும் தந்தை பணிக்குத் திரும்பிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். 

இந்த வீடியோதான் இப்போது வைரல். தோனி சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன், சிறந்த கணவன், சிறந்த தந்தை என அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். 

 

 

Game over, had a nice sleep now back to Daddy’s duties

A post shared by M S Dhoni (@mahi7781) on