வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:05:30 (28/04/2018)

பார்சிலோனாவில் இருந்து விலகினார் ஆன்ட்ரஸ் இனியஸ்டா!

பார்சிலோனாவில் இருந்து விடை பெற்றார் ஆன்ட்ரஸ் இனியஸ்டா

பார்சிலோனாவில் இருந்து விலகினார் ஆன்ட்ரஸ் இனியஸ்டா!

பார்சிலோனாவில் இருந்து விலகினார் 'மிட்பீல்ட் மேஸ்ட்ரோ' ஆன்டரஸ்ட் இனியஸடா. சீன கால்பந்து அணியில் அவர் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. 

பார்சிலோனா அணியில் இருந்து விலகினார் ஆன்ட்ரஸ்

வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க இதை இனியஸ்டா அறிவித்தார். பார்சிலோனா அணியின் சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். பன்னிரண்டு வயதில் பார்சிலோனா யூத் கால்பந்து அகாடமியான லா மேசையாவில்  சேர்ந்த இனியஸ்டா, உலகின் மிகச்சிறந்த சிறந்த மிட்பீல்டர்களுல் ஒருவராக கருதப்பட்டவர்.  பார்சிலோனா அணியுடன் 8 லாலீகா கோப்பைகளையும் 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் இனியஸ்டா வென்றுள்ளார். 

தற்போது 33 வயதான இனியஸ்டா பார்சிலோனாவுக்காக 21 ஆண்டுகளில் 669 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 31 டிராபிகளை வென்றுள்ளர். இனியஸ்டா கூறுகையில், பார்சிலோனா அணியை எதிர்த்து எந்த சூழலிலும் விளையாட விரும்பவில்லை. அதனால், ஐரோப்பிய கண்டத்தை விட்டு நான் வெளியேறுகிறேன். என் முழு வாழ்க்கையை இந்த அணியுடன் கழித்து விட்டேன். கடின மனதுடன் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். பார்சிலோனாவுக்கும் யூத் அகாடமி லா மேசையாவுக்கும் என்றென்றும் நன்றி உடையவனாக இருப்பேன். '' என்றார். 

இனியஸ்டா சைனீஸ் சூப்பர் லீக் அணிகளில் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி கோலை அடித்து ஸ்பெயின் அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் இவர்தான்.  2008, 20 2-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையை ஸ்பெயின் அணி வெல்ல இனியஸடா முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க