'கேப்டனாக 150-வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் தோனி! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த மும்பை #CSKvsMI | Mumbai Indians win the toss and elect to field against csk

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (28/04/2018)

கடைசி தொடர்பு:19:48 (28/04/2018)

'கேப்டனாக 150-வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் தோனி! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த மும்பை #CSKvsMI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

twitter / @chennaiipl

புனேவில் நடைபெறும் இந்த போட்டி, ஐபிஎல் தொடரில் கேப்டனாக தோனி பங்கேற்கும் 150-வது போட்டியாகும். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நடப்பு ஐபிஎல் தொடரின் சென்டிமென்டைப் பின்பற்றி ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடி வீரர் பொல்லார்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டுமினி மற்றும் பென் கட்டிங் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்திலும், மும்பை அணி கடைசி இடத்திலும் இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க