வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (29/04/2018)

கடைசி தொடர்பு:00:02 (29/04/2018)

பழி தீர்த்தது மும்பை..! சென்னையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது

சென்னைக்கு எதிரானப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் சென்னை அணி மும்பை அணிக்கு இடையிலானப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய வாட்சன் 12 ஆட்டமிழந்தார். மறுமுனையில் இறங்கிய ராயுடு நிதானமாக ஆடி, 46 ரன்கள்எடுத்தார்.

ஒன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரெய்னா அதிரடியாக ஆடி 75 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்துகளமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சூர்யாகுமார் யாதவ் 44 ரன்களும், ஈவின் லீவிஸ் 47 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார்.