கலக்கல் பந்துவீச்சு! - 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத் #RRvsSRH | IPL2018: SRH beat RR by 11 runs in Jaipur

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (29/04/2018)

கடைசி தொடர்பு:19:39 (29/04/2018)

கலக்கல் பந்துவீச்சு! - 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத் #RRvsSRH

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. 

ஹைதராபாத் அணி

ஜெய்ப்பூர் சாவாய் மான்சீங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 13 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. 4 ரன்களில் ராகுல் திரிபாதி ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், கேப்டன் ரஹானேவுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. அதில் சாம்சனின் பங்கு மட்டுமே 40 ரன்கள். 72 ரன்களில் சாம்சனின் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணிக்கு, அதன்பிறகு பெரிய அளவிலான பாட்னர்ஷிப்புகள் இறுதிவரை அமையவில்லை. சாம்சனுக்குப் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், வருவதும் போவதுமாக இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 3 பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார். ஜோஸ் பட்லர் 10 ரன்களிலும், அறிமுக வீரர் லாம்ரோர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் இறுதிவரை களத்தில் இருந்த ரஹானே, 53 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்திருந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணி தரப்பில், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.