'நான்கு மாற்றங்களுடன் களமிறங்கும் பெங்களூர் அணி!' - கொல்கத்தா ஃபீல்டிங் தேர்வு #RCBvsKKR | IPL 2018: KKR wins toss, and elected to bowl first against RCB

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (29/04/2018)

கடைசி தொடர்பு:20:01 (29/04/2018)

'நான்கு மாற்றங்களுடன் களமிறங்கும் பெங்களூர் அணி!' - கொல்கத்தா ஃபீல்டிங் தேர்வு #RCBvsKKR

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

கொல்கத்தா ஃபீல்டிங் தேர்வு

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. அதேநேரம், பெங்களூர் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி களமிறங்குகிறார். இதுதவிர, கடந்த சில போட்டிகளில் சொதப்பிய கோரி ஆண்டர்சனுக்குப் பதிலாக மெக்கல்லமும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரரான எம்.அஷ்வினும், பவன் நெகிக்குப் பதிலாக மனன் வோராவும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். 

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 4வது இடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இருக்கிறது. இந்தசூழலில் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த போட்டி அமைந்துள்ளது.     
 


[X] Close

[X] Close