வெளியிடப்பட்ட நேரம்: 00:13 (30/04/2018)

கடைசி தொடர்பு:07:10 (30/04/2018)

'சொதப்பிய பெங்களூரு பந்துவீச்சாளர்கள்' - 4-வது வெற்றியைப் பதிவுசெய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

photo credit : @IPL

ஐ.பி.எல் 29 லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. இதில்  டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்க பெங்களூர் அணியிலோ 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி களமிறங்குகிறார். இதேபோல் கோரி ஆண்டர்சனுக்குப் பதிலாக மெக்கல்லமும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரரான எம்.அஷ்வினும், பவன் நெகிக்குப் பதிலாக மனன் வோராவும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு மெக்கல்லம், டி காக் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. 

எனினும் ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி, 68 ரன்கள் எடுத்தார். பிரெண்டன் மெக்கல்லம் 38 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் - சுனில் நரேன் அதிரடி துவக்கம் தந்தனர். 27 ரன்கள் எடுத்திருந்த போது நரேனை முருகன் அஸ்வின் வெளியேற்றினார். அடுத்துவந்த உத்தப்பாவும் 36 ரன்களுக்கு அஸ்வின் ஓவரில் அவுட் ஆனார். கிறிஸ் லின் 7 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 62 குவிக்க கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பெங்களூர் அணி தரப்பில் அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க