ப்ரித்வி ஷா... ஷ்ரேயாஸ் ஐயர்... சமாளிக்க என்ன செய்யலாம் தோனி? #CSKvDD | CAN DHONI DOMINATE DELHI DAREDEVILS?

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (30/04/2018)

கடைசி தொடர்பு:18:20 (30/04/2018)

ப்ரித்வி ஷா... ஷ்ரேயாஸ் ஐயர்... சமாளிக்க என்ன செய்யலாம் தோனி? #CSKvDD

டெல்லிக்கு ஏன் இவ்வளவு பில்ட் அப் என்றுதான் நினைக்கத்தோன்றும்... ஆனால் கொல்கத்தாவை டெல்லிப் போட்டிப்புரட்டி எடுத்ததைப் பார்த்தவர்கள் டெல்லியெல்லாம் சென்னைக்கு ஜுஜூபி என ஜஸ்ட் லைக் தட் கடந்துவிடமுடியாது!

ப்ரித்வி ஷா... ஷ்ரேயாஸ் ஐயர்... சமாளிக்க என்ன செய்யலாம் தோனி? #CSKvDD

டெல்லிக்கு ஏன் இவ்வளவு பில்ட் அப் என்றுதான் நினைக்கத்தோன்றும்... ஆனால் கொல்கத்தாவை டெல்லிப் போட்டிப்புரட்டி எடுத்ததைப் பார்த்தவர்கள் டெல்லியெல்லாம் சென்னைக்கு ஜுஜூபி என ஜஸ்ட் லைக் தட் கடந்துவிடமுடியாது! #IPL2018 #CSKVSDD #MATCHPREVIEW

அணியின் புதிய கேப்டனாக டெல்லிக்கு பவர் பூஸ்ட் கொடுத்திருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். ஜூனியர் சச்சின் போல பேட்டிங் ஸ்டைலில் மிரட்டும் ப்ரித்வி ஷா சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். காலின் முன்ரோ, ரிஷப் பன்ட், க்ளென் மேக்ஸ்வெல் என பேட்டிங்கிலும், ட்ரென்ட் பெளல்ட், ப்ளெங்கெட் என வேகப்பந்து வீச்சிலும் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது டெல்லி. ஆனால், அந்த அணியின் ஒரே பலவீனம் ஸ்பின். அமித் மிஷ்ராவைத் தவிர குவாலிட்டி ஸ்பின்னர்கள் இல்லை. க்ளென் மேக்ஸ்வெல்லின் சுழற்பந்துகளை சென்னை ஈஸியாக சமாளித்துவிடும். அதற்குமுன் சென்னையின் பெளலிங்தான் முதல் கவலை!

IPL2018


எனர்ஜி பத்தல ப்ரோ!
மும்பைக்கு எதிரான மேட்சில் பிராவோவைத் தவிர டெத் ஓவர்களில் யாரும் சரியாகப் பந்து வீசாதேதே சென்னையின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், வாட்ஸன், தாக்கூர் என இந்த பெளலிங் அட்டாக் டெல்லியின்  பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எடுபடுமா என்பது சந்தேமே. 

பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா என கடைசியாக விளையாடிய மூன்று அணிகளுக்கு எதிராகவுமே அரை சதம் அடித்திருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். அதன் உச்சம் கொல்கத்தாவுக்கு எதிராக அடித்த 93 ரன்கள். வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டையுமே அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மென் இவர். இந்தியாவின் அடுத்த ஷேவாக் என அழைக்கப்படும் ஷ்ரேயாஸ் ஐயரின் கான்ஃபிடன்ஸ்தான் பெரிய பலம். இன்றைய ஆட்டத்தில் ஷ்ரேயாஸின் பேட்டிங்கை சமாளிக்க ஸ்பின்னர்களை தோனி பயன்படுத்தலாம்.

கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் பியுஷ் சாவ்லாவின் பந்துகளை மட்டும்தான் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் இருவருமே அடிக்கத் தயங்கினர். அதனால் லெக் ஸ்பின்னரான கான் ஷர்மாவை இன்றைய மேட்சில் தோனி பயன்படுத்தலாம். அதேப்போல் 7 மேட்ச்களில் விளையாடி வெறும் 10 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கும் லெக் ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜாவையும் இன்றையப் போட்டியில் தோனி பயன்படுத்தலாம். ஷா, ஐயர் இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் இடது கை ஆர்தோடாக்ஸ்   ஸ்பின்னரான ஜடேஜாவின் பந்து வீச்சு இவர்களுக்கு எதிராக நிச்சயம் எடுபடும். 

IPL2018


சென்னையின் பேட்டிங்!
டெல்லியின் பலவீனம் பெளலிங் என்பதால் சென்னை முதலில் ஆடினால் 200 ரன்களுக்கு மேல் எதிர்பார்க்கலாம். வாட்ஸன், ராயுடு, ரெய்னா, தோனி என எல்லோருமே ஃபார்மில் இருப்பதால் இன்றைய மேட்சில் சென்னையின் பேட்டிங் களைகட்டும். இன்றைய போட்டியில் பில்லிங்ஸுக்கு பதிலாக டுப்ளெஸ்ஸி ஆடுவார் என்பதால் அவரது இன்னிங்ஸ் சென்னைக்கு போனஸ்தான். 

IPL2018வாட்ஸனை சமாளிக்க ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை பவர் ப்ளே ஓவர்களிலேயே கொண்டுவரலாம். அதேப்போல் இன்றைய மேட்சில் ப்ளெங்கெட்டின் ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள்தான் இவர் எடுத்திருக்கிறார் என்றாலும் இவரின் லைன் அண்ட் லெங்த் மிகச்சிறப்பாக இருக்கிறது. எகானாமி ரேட்டிலும் கெத்துகாட்டுகிறார். அதனால் பவர்ப்ளே ஓவர்களில் பெளல்ட்டோடு, பளங்கெட்டும் பயம்காட்டுவார் என எதிர்பார்க்கலாம். 

IPL2018இன்றைய மேட்சில் சென்னை அணியில் வெளிநாட்டு வீரர்களாக வாட்ஸன், டுப்ளெஸ்ஸி, டேவிட் வில்லி, பிராவோ ஆகியோர் இடம்பிடிப்பர்.

புனே பிட்ச்சில் சேஸ் செய்பவர்களே அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதால் டாஸ் இன்று மிக முக்கியமானதாக இருக்கும். அதேப்போல் இன்று விளையாடும் இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் செம ஸ்ட்ராங் என்பதால் பெளலிங்தான் இன்றைய வெற்றியைத் தீர்மானிக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்