'ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை’ - வாடகைக் கிரேனில் கால்பந்துப் போட்டியைக் கண்டுகளித்த ரசிகர்! | football fan receives stadium ban, hires crane to watch team match

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/04/2018)

கடைசி தொடர்பு:22:30 (30/04/2018)

'ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை’ - வாடகைக் கிரேனில் கால்பந்துப் போட்டியைக் கண்டுகளித்த ரசிகர்!

மைதானத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட ரசிகர் கிரேன் வாடகைக்கு எடுத்து அதன் மீது ஏறி போட்டியைப் பார்த்தார்.

'ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை’ - வாடகைக் கிரேனில் கால்பந்துப் போட்டியைக் கண்டுகளித்த ரசிகர்!

கால்பந்து விளையாட்டுக்கு வெறி மிகுந்த ரசிகர்கள் உண்டு. இவர்களால் மைதானங்கள் அல்லோலகல்லோலப்படும் மைதானத்துக்குள் சேட்டையில் ஈடுபடும் கால்பந்து ரசிகர்களுக்கு மைதானங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்படுவது உண்டு. தடை விதிக்கப்படும் ரசிகர்கள் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவதில்லை. எப்படியாவது மைதானத்துக்கு நுழையவே தருணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். துருக்கியைச் சேர்ந்த 'Denizlispor' கால்பந்து அணியைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவருக்கு மைதானத்துக்குள் நுழைய ஓர் ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. 

கிரேன் வாடகைக்கு எடுத்து போட்டியை ரசித்த கால்பந்து ரசிகர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை Denizlispor -  Gaziantepspor அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற்றது. போட்டியைக் காண வேண்டுமென்று முடிவெடுத்த அந்த ரசிகர் நல்ல உயரமான கிரேன் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். பின்னர், ஸ்டேடியத்துக்கு அருகே நிறுத்தி கிரேனில் ஏறி போட்டியைப் பார்த்து ரசித்தார். அப்போது, தன் கையில் Denizlispor அணியின் கொடியையும் ஏந்தியிருந்தார். போலீஸாரும் அவரைத் தடுக்கவில்லை. அதேநேரம், இப்படிப் பாதுகாப்பற்ற முறையில் போட்டியைப் பார்ப்பது சரியானதா என்று கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கால்பந்து ரசிகரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க