மழையால் தாமதம்! - 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட டெல்லி - ராஜஸ்தான் போட்டி #DDvsRR | IPL 2018: DDvsRR match reduced to 18 overs perside after rain delay

வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (02/05/2018)

கடைசி தொடர்பு:07:36 (03/05/2018)

மழையால் தாமதம்! - 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட டெல்லி - ராஜஸ்தான் போட்டி #DDvsRR

டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி மழையால் தாமதமாகத் தொடங்கப்பட்டதால், 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 

டெல்லி பெரோஷா கோட்லா மைதானம்

Photo: Twitter/IPL

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே, ஃபீல்டிங் தேர்வு செய்தார். டாஸுக்குப் பின்னர் மழைப்பொழிவு தொடங்கியதால், குறிப்பிட்ட நேரத்துக்குப் போட்டியைத் தொடங்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், 9 மணிக்குப் பிறகு மழை குறையத் தொடங்கி, முற்றிலுமாக நின்றது. இதையடுத்து மைதானத்தைப் பரிசோதித்த நடுவர்கள் போட்டி 9.30 மணிக்குத் தொடங்கும் என்றும், தலா 18 ஓவர்கள் கொண்டதாகப் போட்டி இருக்கும் என்றும் அறிவித்தனர். 

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சோதி மற்றும் மஹிபால் லாம்ரோர் ஆகியோருக்குப் பதிலாக டிஆர்கி ஷார்ட் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் டீவாட்டியாவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.