`கொல்கத்தாவுக்குக் கைகொடுக்குமா ஐபிஎல் சென்டிமென்ட்?’ - மாற்றமில்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே #KKRvsCSK

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் காயம் காரணமாக நிதிஷ் ராணா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், சென்னை அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக ஜொலிக்காத நிலையே முதல் 7 போட்டிகளில் தொடர்ந்தது. இதையடுத்து டெல்லி அணிக்கெதிரான 8-வது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாக்குர் ஆகிய இருவரையும் மாற்றி, புதிதாக லுங்கி இங்கிடி மற்றும் கே.எம்.ஆசிஃப் ஆகியோரை தோனி களமிறக்கினார். இந்த ஜோடி சிறப்பாகவே செயல்பட்டது. இதனால், அதே வேகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து சென்னை அணி களமிறங்குகிறது. 

கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதியது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். அந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஆல் ரவுண்டர் ரஸலின் அதிரடியால் 202 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், சாம் பில்லிங்ஸில் கேமியோவால் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!