வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (03/05/2018)

கடைசி தொடர்பு:22:15 (03/05/2018)

`கடைசி ஓவர்களில் தடுமாறிய சென்னை!’ - கொல்கத்தாவுக்கு 178 ரன்கள் இலக்கு #KKRvsCSK

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 

சென்னை அணி கேப்டன் தோனி

கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களமிறங்கியது. கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராணாவுக்குப் பதிலாக ரிங்கு சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். 

சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூபிளசி ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 27 ரன்களுடன் டூபிளசி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரெய்னா, வாட்சனுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 91 ஆக இருந்தபோது சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 36 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் சிறிய இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் என்ற நிலையில் சென்னை அணி தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு தோனி- ஜடேஜா ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார். குறிப்பாகக் கடைசி ஓவர்களில் பெரிய அளவில் சென்னை அணி ரன்குவிக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்டது. தோனி 43 ரன்களுடனும், கரண் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.