`குர்னல் பாண்டியா அசத்தல்' - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

photo credit : twitter/ipl 

ஐபிஎல் 34வது லீக் போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இந்த இணை மெதுவாக ஆட்டத்தை தொடங்கியது. ராகுல் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கெய்ல் அரைசதம் அடித்து அவுட் ஆனார். எனினும் அடுத்தவந்த வீரர்கள் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீரர் லீவிஸ் 10 ரன்களில் ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரர் சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். அவர் 42 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 

பின்னர் வந்த இஷான் கிஷான் மற்றும் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக ஆடினார். இஷான் 25 ரன்களுக்கும், பாண்டியா ரன்களுக்கும் வெளியேறினர். அதன்பின் இணைந்த கேப்டன் ரோஹித் சர்மா - குர்னல் பாண்டியா அதிரடியாக ஆடி மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு ஓவர் மீதமிருக்கையில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. குர்னல் பாண்டியா 31 ரன்களுடனும், ரோஹித் சர்மா 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருந்த மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் சற்று நிம்மதியடைந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!