`கோலியின் விக்கெட்டைக் கொண்டாடாமல் இருந்ததற்கு இதுதான் காரணம்!’ - ஜடேஜாவின் அடடே பதில் | Jadeja happy about for took Virat Kohli's wicket

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (05/05/2018)

கடைசி தொடர்பு:19:05 (05/05/2018)

`கோலியின் விக்கெட்டைக் கொண்டாடாமல் இருந்ததற்கு இதுதான் காரணம்!’ - ஜடேஜாவின் அடடே பதில்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின்போது, விராட் கோலியை விக்கெட் எடுத்த பின் ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தடுமாறியது. ஏழாவது ஓவரை வீசிய ஜடேஜாவின் முதல் பந்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதனை உற்சாகத்துடன் கொண்டாட வந்த ஜடேஜா பின்பு அமைதியானார். அப்போது, விராட் கோலியின் முகம் கோபத்தில் இருந்தது.

அந்த நேரத்தில், அவர்கள் இருவரும் கொடுத்த ரியாக்ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஐ.பி.எல்-லின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படம் பகிரப்பட்டது. பெங்களூர் அணியின் இன்னிங்ஸ் முடிந்தபின்னர் இதுகுறித்து ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஜடேஜா, `நான், உண்மையில் இன்று என்னுடைய பந்துவீச்சு குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஏனென்றால் நான், சரியான இடத்தில் பந்து வீசினேன். விராட் கோலியை விக்கெட் எடுத்தது என்னுடைய முதல் பந்து. அதனால், நான் கொண்டாட்டத்துக்குத் தயாராகவில்லை. அப்போது நான், ஒரு முக்கியமான விக்கெட் எடுத்ததாக உணர்ந்தேன். எங்கள் அணியில் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. நாங்கள், வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.