`ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைக்குமா பெங்களூர்?’ - ஹைதராபாத் பேட்டிங் #SRHvsRCB | IPL 2018: RCB won the toss and elected to bowl against SRH

வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (07/05/2018)

கடைசி தொடர்பு:20:07 (07/05/2018)

`ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைக்குமா பெங்களூர்?’ - ஹைதராபாத் பேட்டிங் #SRHvsRCB

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூர் கேப்டன் விராட் கோலி

ஹைதராபாத் நகரில் நடக்கும் இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கும் நிலையில், பெங்களூர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெக்கல்லம் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோருக்குப் பதிலாக மொயின் அலி மற்று மனன் வோரா ஆகியோர் பெங்களூர் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த மொயின் அலி, இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறார். 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி முதலிடத்தில் இருக்கிறது. அதேநேரம், 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 வது இடத்தில் பெங்களூர் அணி இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க முடியும் என்ற நிலையில் களமிறங்குகிறது.