Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காகத் தங்கள் உடையை பிங்க் நிறத்தில் மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..!

இதுவரை நீல நிற உடையில் விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புற்றுநோய்க்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தங்களது உடையைப் பிங்க் நிறத்தில் மாற்றியுள்ளது.  

ராஜஸ்தான் ராயல்ஸ்

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு தங்களைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராடி வருகிறது. இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. ஐ.பி.எல் தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை நீல நிற உடையில் விளையாடி வந்தது இந்த அணி. ஆனால், நாளை நடைபெற உள்ள சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், புற்றுநோய்க்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தங்களின் உடையை பிங்க் நிறத்தில் மாற்றியுள்ளது ராஜஸ்தான் அணி. உடையில் உள்ள பிங்க் (Pink) - மார்பகப் புற்றுநோய், பர்கண்டி (Burgundy) - வாய்வழி புற்றுநோய், (Teal) - கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவற்றைக் குறிக்கும் நிறம். 

இது குறித்து பேசிய கேப்டன் ரஹானே, ``சமூகத்தில் புற்று நோயே இருக்கக் கூடாது என்ற முயற்சியில் ஒரு விளையாட்டு வீரராக எங்களால் முடிந்தவற்றைச் செய்துள்ளோம்' எனக் கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement