வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/05/2018)

கடைசி தொடர்பு:16:01 (12/05/2018)

வீக் எண்ட் மோடில் ஐபிஎல்! - பஞ்சாப் சவாலை சமாளிக்குமா கொல்கத்தா? #KXIPvsKKR

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல்
 

இதுவரை ஆடிய 10 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. தாங்கள் விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்று சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி, தற்போது சற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

அதேபோல் கணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தும் கொல்கத்தா அணி 11 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்  ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தூரிலுள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கியமான போட்டியாகும். 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 3 அணிகளுக்கான இடத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இவ்விரண்டு அணிகளும் கடுமையாக முயற்சி செய்கின்றன.

அதேபோல் இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், இப்போட்டி சம்பிரதாய போட்டியாகவே உள்ளது. பெங்களூரு அணியின் கேப்டன் கோலியின் சொந்த ஊரில் இப்போட்டி நடைபெறுவதால், அவரது ஆட்டத்தைக் காண உள்ளூர் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.