கோலி - டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டம்; டெல்லி அணி மீண்டும் தோல்வி! #DDvRCB

ஐ.பி.எல் தொடரில் இன்று நடந்த போட்டியில் பெங்களுர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.  

ஐ.பி.எல்

Photo: Twitter/ipl

ஐ.பி.எல் தொடரில் இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி பெங்களூர் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார். டெல்லி அணியில் ப்ரித்திவி ஷா - ஜேசன் ராய் களமிறங்னார். ஷா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ராய் 12 ரன்னில் நடையைகட்ட டெல்லி அணி தடுமாறியது. பின்னர் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பன்ட் இணைந்து அணியை மீட்டனர். அதிலும் குறிப்பாக பன்ட், அதிரடியாக விளையாடினார். கடந்த போட்டியில் சதம் அடித்த பன்ட் இந்த முறையும் சிறப்பாக விளையாடினார். பன்ட் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, அதிரடி காட்டினார். அவர் 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மோயீன் அலி 1 ரன்னிலும், பார்திவ் பட்டேல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய கோலி, டிவில்லியர்ஸ் இணை ஆட்டத்தை டெல்லி கையில் இருந்து பறித்துவிட்டது. அதிரடியாக விளையாடிய கோலி 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி - டிவில்லியர்ஸ் இணை மட்டும் 66 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கைப் பிடித்தது. டெல்லி அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பெங்களுர் அணி 4 வெற்றிகளுடன் 7 -வது இடத்திலும், டெல்லி அணி 3 வெற்றிகளுடன் 8 -வது இடத்திலும் உள்ளது.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!