வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (13/05/2018)

கடைசி தொடர்பு:23:45 (13/05/2018)

`தொடர்ச்சியாக 5 அரைசதம் அடித்த ஜாஸ் பட்லர்' - மும்பையைத் தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்! #MIvsRR

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

photo credit :@bcci

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளுமே தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு லீவிஸ் - சூரிய குமார் யாதவ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சூரிய குமார் யாதவ் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். எனினும் நன்றாக ஆடிய லீவிஸ் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் ஹர்திக் பாண்டியா தவிர மற்றவர்கள் சோபிக்க தவற அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஷார்ட் - பட்லர் ஜோடி துவக்கம் தந்தது. ஷார்ட் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தாலும் பின்னர் இணைந்த ரஹானே - பட்லர் இணை பொறுப்பாக ஆடியது. ரஹானே 37 ரன்களுக்கு வெளியேறினார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் பட்லர் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சேவாக்கிற்கு அடுத்து தொடர்ச்சியாக 5 அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பட்லர் படைத்தார். இறுதியாக 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க