`சொதப்பிய மிடில் ஆர்டர்' - டெல்லியிடம் பணிந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..! #DDvsCSK | Delhi Daredevils won by 34 runs

வெளியிடப்பட்ட நேரம்: 23:49 (18/05/2018)

கடைசி தொடர்பு:07:34 (19/05/2018)

`சொதப்பிய மிடில் ஆர்டர்' - டெல்லியிடம் பணிந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..! #DDvsCSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியில் டேவிட் வில்லிக்குப் பதிலாக லுங்கி இங்கிடியும், டெல்லி அணியில் மேக்ஸ்வெல் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். இதன்பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்குத் துவக்க வீரர்கள் ஏமாற்றினாலும், ரிஷாப் பன்ட், ஹர்ஷல் படேல் மற்றும் விஜய் சங்கர் பொறுப்பாக ஆடினர். இவர்களின் உதவியால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து எட்டக் கூடிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம்போல அம்பதி ராயுடு, வாட்சன் தொடக்கம் தந்தனர்.  வாட்சன் இன்று மெதுவாக ஆடினார். அவர் 23 பந்துகள் சந்தித்து வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எனினும் மறுமுனையில் இருந்த அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ராயுடு 50 ரன்களுக்கு வெளியேற, பின் வந்த வீரர்களில் ஜடேஜா தவிர மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக  பவுல்ட் மற்றும் அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க