வெளியிடப்பட்ட நேரம்: 23:48 (19/05/2018)

கடைசி தொடர்பு:23:51 (19/05/2018)

`கிறிஸ் லின், உத்தப்பா அபாரம்' - பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கொல்கத்தா அணி! #SRHvsKKR

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

photo credit : @ipl

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ள இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி களமிறங்கியது. இதனையடுத்து களம்கண்ட ஹைதராபாத் அணிக்கு இந்த முறை ஷிகர் தவானுடன், கோஷ்வாமி துவக்க வீரராகக் களமிறங்கினார். இருவரும் நன்றாக இன்னிங்சை துவக்கினர். கோஷ்வாமி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த தவான் - வில்லியம்சன் இணை இந்த முறையும் அதிரடியாக ஆடியது. இருப்பினும் தவான் 50 ரன்களுக்கும், வில்லியம்சன் 36 ரன்களுக்கும் வெளியேற அணியில் ஸ்கோர் குறைய ஆரம்பித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 

இதன்பின்னர் கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் - சுனில் நரேன் ஜோடி துவக்கம் தந்தது. வழக்கம் போல் சுனில் நரேன் குறைந்த பந்துகளில் அதிரடி காட்டிவிட்டு சென்றார். அவர் 10 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார்.  பின்னர் இணைந்த உத்தப்பா - கிறிஸ் லின் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கிறிஸ் லின் 55 ரன்களும், உத்தப்பா 45 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்ப, கேப்டன் தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து கொல்கத்தா அணி வெற்றி இலக்கை எட்டியது. வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை கொல்கத்தா அணி உறுதி செய்துள்ளது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க