`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்!’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த் | Dhoni gifts signed bat to badminton star srikanth

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (20/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (20/05/2018)

`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்!’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட் குறித்து பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் நெகிழ்ந்துள்ளார்.

ஸ்ரீகாந்த் - தோனி

கிரிக்கெட் உலகில் தோனிக்கு ரசிகர்கள் அதிகம். மற்ற விளையாட்டு வீரர்கள் கூட தோனிக்கு ரசிகராக இருப்பதுண்டு. அந்தவகையில், இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தோனியின் தீவிர ரசிகர் ஆவார். தோனி குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட ஸ்ரீகாந்த், ``கடினமான சூழல்களையும் அமைதியாகவும் நிதானமாகவும் எதிர்க்கொள்ளும் பண்பினை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார். உலகின் மூன்றாம் நிலை வீரராக இருந்த ஸ்ரீகாந்த், சமீபத்தில் நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் தொடரில் வெள்ளி வென்றார். இதையடுத்து, உலக பேட்மிண்டன் தரவரிசையில் அவர் முதலிடத்துக்கு அவர் முன்னேறினார். 

இந்தநிலையில், கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு தோனி ஸ்பெஷல் கிஃப்ட் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். வாழ்த்துகளுடன், தனது கையெழுத்திட்ட பேட் ஒன்றை ஸ்ரீகாந்துக்கு தோனி அனுப்பி வைத்துள்ளார். அந்த பேட்டை இந்தியக் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ஸ்ரீகாந்தை ஹைதராபாத்தில் நேரில் சந்தித்து அளித்துள்ளார். தோனியின் சர்ப்ரைஸ் கிஃப்ட் குறித்து நெகிழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீகாந்த், ``உங்களது அற்புதமான பரிசுக்கு நன்றி தோனி. எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் கூற இயலாது’’ என்று நெகிழ்ந்துள்ளார்.