வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (22/05/2018)

கடைசி தொடர்பு:21:03 (22/05/2018)

`பிராவோ அசத்தல் கேட்ச்; பௌலர்களின் கன்ஸிஸ்டன்ஸி!’ - ஹைதராபாத்தை 139 ரன்களில் சுருட்டிய சென்னை

ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர்-1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 139 ரன்கள் குவித்துள்ளது. 

photo credit: @chennaiipl

ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர்கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடையே பிளே ஆஃப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், முதல்  இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் இடையிலான குவாலிஃபையர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது .ஹைதராபாத் அணி, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியது. அதேநேரம், சென்னை அணியில் சாம் பில்லிங்ஸுக்குப் பதிலாக ஷேன் வாட்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு முதல் பந்திலேயே தீபக் சஹார் அதிர்ச்சி அளித்தார். முதல் பந்தில் தவான் போல்டு  ஆக்கி வெளியேற்ற, அடுத்து வந்த கோஸ்வாமி, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும் முறையே 12, 24 ரன்களுக்கு வெளியேறினர். 

எனினும் பிராத்வொயிட் தவிர பின்னர் வந்த ஹைதராபாத் வீரர்கள் சொதப்பினர். பிராத்வொயிட் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணிய ரன்கள் எடுக்கவிடாமல் சென்னை பௌலர்களின் அசத்தினர். குறிப்பாக யூசுப் பதான் அடித்த பந்தை லாகவமாக பிராவோ கேட்ச் பிடித்து அசத்தினார். இதன்பின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிராவோ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். தோல்வியடையும் அணி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோத வேண்டி வரும். இதற்கிடையே, முதல் அணியாகச் சென்னை இறுதிப்போட்டிக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க