சச்சினின் தீவிர ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! | MS Dhoni Hosts Indian Cricket's Biggest Fan for Lunch

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (02/06/2018)

கடைசி தொடர்பு:15:19 (02/06/2018)

சச்சினின் தீவிர ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கௌதமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து கௌரவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி. 

தோனி - சுதிர் கௌதம்

சுதிர் கௌதம், இந்திய அணி விளையாடும் போட்டிகளை இடைவிடாமல் பார்ப்பவர்களுக்கு இந்தப் பெயர் நிச்சயம் பரீட்சயம் இருக்கும். பீகாரைச் சேர்ந்த சுதிர் கௌதம், சச்சின் டெண்டுல்கரின் அதி தீவிர ரசிகர். தேசியக்கொடியை உடம்பு முழுவதும் வரைந்துகொண்டு, `miss u tendulkar' என எழுதிக்கொண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகளில் தவறாமல் கலந்துகொள்வார். போட்டி எங்கு நடந்தாலும், அது லண்டன் ஆக இருக்கலாம் அல்லது பெங்களூரு சின்னசாமி மைதானமாக இருக்கலாம் தவறாமல் அங்கு சுதிர் இருப்பார். கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக இவர் பலமுறை ஜெயிலுக்குச் சென்றிருப்பது தனிக்கதை. இவரின் கிரிக்கெட் காதலைத் தெரிந்துகொண்ட சச்சின், சுதிர் பார்க்கவுள்ள அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவரே செலவு செய்து வருகிறார். 

இதற்கிடையே, சுதிர் கௌதமுக்கு விருந்து அளித்து மகேந்திர சிங் தோனி கௌரவப்படுத்தியுள்ளார். மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய உற்சாகத்திலும், அடுத்தகட்ட போட்டிகளுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்து வருகிறார் தோனி. இந்தச் சமயத்தில்தான் சுதிர் கௌதமை கௌரவிக்கும் விதமாக அவரை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது தோனி, சாக்ஷி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தை சுதிர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது. முன்னதாக சுதிருக்கு சச்சினும் விருந்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close