`ஐ.பி.எல் தொடரில் முன்னதாகக் களமிறங்கியது ஏன்? - தோனி விளக்கம்

ஐ.பி.எல் போட்டிகளில் முன்னதாகக் களமிறங்கியது குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் முன்னதாகக் களமிறங்கியது குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.

தோனி


ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதனிடையே ஐ.பி.எல் தொடர்களில் தோனி வழக்கத்துக்கு மாறாக முன்னதாகக் களமிறங்கியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, தனது வயது காரணமாக முன்னதாகக் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், அணியின் வெற்றியைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

`முன்னதாகக் களமிறங்கி நான் வெளியேறினாலும் எனக்கு அடுத்து களமிறங்குபவர்கள், விளையாட்டின் வெற்றியை உறுதி செய்ய எளிதாக இருக்கும்' என அவர் தெரிவித்தார். மேலும், 'அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் எங்கள் அனைத்து வீரர்களையும் களமிறக்க வேண்டிய தேவை இருந்ததில்லை. காரணம், வாட்சன், ராயுடு, ரெய்னா, பிராவோ முன்னதாகவே வெற்றியைத் தேடித்தந்தது எங்களுக்கு உதவியது. அதேபோல அம்பதி ராயுடு எங்கள் அணியின் பலம். அணியின் தேவைக்காக அவர் நடுவரிசையில் களமிறங்கிய போது, 4 -வது இடத்தில் களமிறங்கப்பட்டார்' என்று தோனி தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!