உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்திய ஸ்வீடன்! | Sweden beats South Korea in FIFA World Cup 2018

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (18/06/2018)

கடைசி தொடர்பு:22:25 (18/06/2018)

உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்திய ஸ்வீடன்!

ரஷ்யாவின் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில், 2018 உலகக்கோப்பை கால்பந்து குரூப் 'F' பிரிவில் இரண்டாவது மேட்ச் இன்று நடைபெற்றது. இதே பிரிவில் நேற்று நடந்த மேட்சில் நடப்பு சேம்பியன் ஜெர்மனியை, மெக்சிகோ 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இன்றைய மேட்சில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதால், ஸ்வீடன் மற்றும் தென்கொரியா அணிகள் வெற்றிபெற கடுமையாக முயற்சித்தன.

உலகக்கோப்பை கால்பந்து - ஸ்வீடன்

தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், முதல்பாதி கோல் எதுவும் இன்றி முடிந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், 63வது நிமிடத்தில் தென்கொரியாவின் பெனால்டி ஏரியாவில் டிஃபண்டர் செய்த செய்த தவறால், ஸ்வீடன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆண்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட் (Andreas Granqvist) கோல் போட்டார். இதனால் ஸ்வீடன் 1-0 என்ற முன்னிலை பெற்றது.

ஆட்டநேரம் முடியும் வரை தென்கொரிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. நான்கு முறை உலக சாம்பியனாக வலம்வந்த இத்தாலியை, தகுதிப் போட்டிகளில் வீழ்த்திய ஸ்வீடன் அணி, இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை எளிதாக வீழ்த்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க