இறுதி நிமிடங்களில் இங்கிலாந்திற்கு கேப்டன் கொடுத்த வெற்றி

முதல் பாதியில் துனிசிய ஆட்டக்காரர் சஸ்ஸி ஒரு கோல் அடித்துச் சமன்செய்துவிடவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகான ஆட்டம் மிகவும் பரபரப்பானதாகவே

ஜீ க்ரூப்பிற்கான (G- Group) ஆட்டத்தில் நேற்று துனிசியா இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்திருந்த நிலையில் துனிசிய ஆட்டக்காரர் சஸ்ஸி ஒரு கோல் அடித்துச் சமன்செய்துவிடவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகான ஆட்டம் மிகவும் பரபரப்பானதாகவே இருந்தது. இரண்டாவது பாதியில் திறமையான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய துனிசிய அணி இங்கிலாந்து அணி கோல் அடிக்க விடாமல் தடுத்தது.

வெற்றி

Photo Courtesy: Thanassis Stavrakis/AP

இரண்டாம் பாதியில் பந்து பலமுறை துனிசிய வீரர்களின் கால்களுக்குக் கிடைத்தாலும், அவர்கள் மிகவும் பதற்றமடைந்துவிட்டதால் அவர்களால் அதைச் சரியாகக் கையாள முடியாமல் போனது. இறுதிவரை பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடிய இங்கிலாந்து அணி கோல் அடிக்கப் பலமுறை முயன்றும் முடியாமல் போனது. ஆட்ட முடிவில் ஸ்டாப்பேஜ் டைம் எனப்படும் கூடுதல் நேரம் கிடைத்தபோது இங்கிலாந்துக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. டிரிப்பர் அடித்த கார்னர் கிக் பாலை லாவகமாகத் தன் தலையால் கோல் கம்பத்துக்குள் தட்டிவிட்டார் இங்கிலாந்து கேப்டனான ஹாரி கேன். கூடுதலாகக் கிடைத்த நான்கு நிமிடங்களின் இரண்டாவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து தனது உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தின் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!