வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (19/06/2018)

கடைசி தொடர்பு:10:38 (20/06/2018)

இங்கிலாந்து அதிரடி..! 481 ரன்கள் குவித்து உலக சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 481 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து

ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேஸன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.

இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய ஜோஸன் ராய் 82 ரன்கள் குவித்து, ரன்அவுட் ஆனார். பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேலிஸூம் அதிரடியாக ஆடினார். அதிரடியாக பேர்ஸ்டோ 92 பந்துகளில் 139 ரன்களும், ஹேலிஸ் 92 பந்துகளில் 147 ரன்களும் குவித்தனர்.

அடுத்ததாக மோர்கன் அதிரடியாக 67 ரன்கள் குவித்தார். அதையடுத்து, இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்டுசன் 3 விக்கெட்டுகளைக் குவித்தார். 

Photo Courtasy: ICC twitter page