போலந்தை வீழ்த்தியது செனகல்..! ரஷ்யாவில் முதல் ஆப்பிரிக்க வெற்றி #WorldCup #POLSEN

உலகக் கோப்பை H பிரிவு லீக் போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று போலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் வெற்றியைப் பதிவு செய்த முதல் ஆப்பிரிக்க அணியானது செனகல். 

POLSEN

முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் போலாந்து, செனகல் அணிகள் இன்று மாலை மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்கும் நோக்கத்தோடு அதிரடியாக விளையாடின, ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் செனகல் நடு கள வீரர் இட்ரிசியா கயி கோல் நோக்கி அடித்த ஷாட், போலாந்து வீரர் தியாகோ சியோனக்கின் காலில் பட்டு கோலானது. ஒரு கோல் மூலம் முன்னணி பெற்றது செனகல். முதல் பாதி 1-0 என முடிவடைந்தது.

ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில், போலாந்து வீரர் தன் பாக்ஸ் நோக்கி மைனஸ் பாஸ் கொடுக்க, போலாந்து டிஃபண்டருக்கும் கோல்கீப்பருக்கும் இடையிலான கம்யூனிகேஷன் சரியாக இல்லாமல் போக, அதைப் பயன்படுத்தி மின்னல் வேகத்தில் யோசித்து அசத்தல் கோலடித்தார் செனகல் ஃபார்வேர்டு எம்பாயே நியாங். செனகல் 2-0 என முன்னிலை பெற்றது. 

POLSEN

அதைத் தொடர்ந்து போலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக அட்டாக் செய்தனர். ஆனால், செனகல் டிஃபண்டர்கல் திடமாக இருந்ததால் கோல் போடமுடியவில்லை. ஒருவழியாக 86-வது நிமிடத்தில் போலாந்து வீரர் கிரிசோவியாக் கோலடித்து ஆட்டத்தை மேலும் விருவிருப்பாக்கினார். கடைசி நிமிடங்களில் போலாந்து வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் கோலடிக்க முடியவில்லை. ஆட்டம் 2-1 என முடிவடைந்தது. அனைத்து ஆப்பிரிக்க அணிகளும் தங்களின் முதல் போட்டியில் தோற்றிருந்த நிலையில், செனகல் அதை மாற்றி எழுதியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!