ஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்! #FIFAFacts | Interesting Facts about Fifa worldcup 2018

வெளியிடப்பட்ட நேரம்: 06:06 (20/06/2018)

கடைசி தொடர்பு:06:06 (20/06/2018)

ஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்! #FIFAFacts

ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகும் FIFA உலகக்கோப்பை, இந்த ஆண்டும் ரஷ்ய நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பல புதிய ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், FIFA மற்றும் மாஸ்கோவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

ஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்! #FIFAFacts

பரபரப்பான IPL முடிந்த வேகத்தில் கலகலப்பாகத் தொடங்கியது உலகக்கோப்பை கால்பந்தாட்டம். ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகும் FIFA உலகக்கோப்பை, இந்த ஆண்டும் ரஷ்ய நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பல புதிய ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், FIFA மற்றும் மாஸ்கோவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

FIFA


1. `உலக மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பேர் இந்த விளையாட்டைப் பார்க்கிறார்கள்' என, FIFA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. `சுமார் 46 சதவிகிதம் பேர், குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது இந்த விளையாட்டைப் பார்த்திருக்கிறார்கள்' என்கிறது அந்த ஆய்வறிக்கை. இதனால், `உலகின் அதிக பார்வையாளர்களைக்கொண்ட விளையாட்டு' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி. இந்தத் போட்டியின்போது கொள்ளை, கொலை போன்ற வழக்குப்பதிவுகளும் குறைந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். (இதுக்காகவே ஆண்டுதோறும் உலகக்கோப்பைப் போட்டி நடத்த வேண்டுமோ!)

2. இந்தச் சமயத்தில், சுமார் மூன்று மில்லியன் `பியர்' பாட்டில்கள் விற்பனையாகின்றன.

Beer

3. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `மெக்டோனல்ஸ் பர்கர்ஸ்', ரஷ்யாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இடம் `புஷ்கின் ஸ்கொயர்'. 1990-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அவுட்லெட்டின் வியாபாரம், இப்போது மேலும் களைகட்டியுள்ளது. FIFA உலகக்கோப்பை 2018-ன் அதிகாரபூர்வ உணவுப் பங்குதாரராக இருக்கும் மெக்டோனல்ஸ், பார்வையாளர்களைக் கவரும்வகையில் ஏராளமான போட்டிகளை நடத்தி, பரிசுகளும் வழங்குகிறது.

McDonalds

4. 1982-ம் ஆண்டு முதல், உலகக்கோப்பை கால்பந்துகளைத் தயாரிக்கும் நாடு `பாகிஸ்தான்'. இங்கு உள்ள `சியால்கோட்' எனும் நகரில்தான் இந்தக் கால்பந்துகள் தயாராகின்றன. சுமார் 40 சதவிகிதம் பந்துகள் இங்கிருந்துதான் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1889-ம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ஒருமுறை துளை உள்ள கால்பந்தை சரிசெய்யச்சொல்லிக் கேட்டபோது, பாகிஸ்தான் தொழிலாளர்கள் விரைந்து செயல்பட்டதையும், அதன் தரத்தையும் மதிப்பிட்டு பல ஆர்டர்கள் குவிய தொடங்கியது. அன்று முதல் இன்று வரை அதிகபட்ச கால்பந்துகள் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Football

5. `The Maracanazo' என்பது, பிரேசில் நாட்டின் `கறுப்பு தினம்' என்றழைக்கப்படுகிறது. கால்பந்தாட்டம் என்பது ஒரு விளையாட்டு என்றாலும், பிரேசில் நாட்டு மக்களுக்கு அதுதான் உயிர்நாடி, உணவு, உறக்கம் எல்லாமே. அந்நாட்டு விளையாட்டு வீரர்களே மக்களின் `ஹீரோக்கள்'. இந்நிலையில், 1950-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் உருகுவே அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். உருகுவே அணியைவிட பிரேசில் அணி மிகவும் தேர்ச்சிபெற்ற வீரர்களைக்கொண்டிருந்ததால், நிச்சயம் அந்த நாட்டுக்கே வெற்றி என அனைவரும் உறுதியோடு இருந்தனர். வரலாற்றிலேயே அதிகப்படியான நேரடிப் பார்வையாளர்களைக்கொண்டிருந்த ஒரே விளையாட்டுப் போட்டி இதுதான் என்ற பெருமையும் இந்த உலகக்கோப்பைப் போட்டிக்கு உண்டு. அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த போட்டியின் இறுதிகட்ட முடிவு, அரங்கையே அதிர்ச்சியிலும் அமைதியிலும் ஆழ்த்தியது.

Crowd

அதுவரை கைத்தட்டல்களால் நிறைந்திருந்த அரங்கம், ஒரு நொடியில் அமைதியானது. உடனடி செய்திகளை வாசிக்கும் வாசிப்பாளர்களும் திணறிப்போனார்கள். காரணம், பிரேசில் அணி தோல்வியைச் சந்தித்ததுதான். இந்த மாபெரும் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சிலர் தற்கொலையும் செய்துகொண்டனர். ஒரு விளையாட்டுக்கு இப்படியொரு தாக்கம் இருக்குமா என்பதை உணர்த்தியது, இந்த 'The Maracanazo' சம்பவம்.

கடல் தாண்டி கால்பந்தாட்டத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு, ரஷ்யாவில் பார்க்க சுவாரஸ்யமான சில இடங்களும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை...

1. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகக் கட்டடம், `மாஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகம்' இங்குதான் உள்ளது.

Moscow University

2. ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகமும், உலகின் இரண்டாவது பெரிய நூலகமுமான `ரஷ்ய மாநில நூலகம்' மாஸ்கோவில் 1862-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Railway station at Russia

3. அதிவிரைவில் இயங்கும் ரயில் போக்குவரத்து, மாஸ்கோவில்தான் உள்ளது. இங்கு `பீக்' டைமில், 1.30 நிமிடத்துக்கு ஒரு ரயில் என மின்னல் வேகத்தில் செயல்படும்.

மேலும், `இது `பில்லியனர்கள்' அதிகம் வசிக்கும் நகரம்' என, பிரபல பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' அறிவித்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்