வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:18:30 (20/06/2018)

`பால் டேம்பரிங் செய்தது நிரூபணம்’ - தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

பால் டேம்பரிங் புகார் நிரூபிக்கப்பட்டதால், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினேஷ் சண்டிமால்

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட், 14-ம் தேதி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டி ட்ராவில் முடிந்தது.  இதன் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இரண்டாம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் பந்தைச் சேதப்படுத்தியாக அம்பயர்கள் சந்தேகம் அடைந்தனர். 

இதையடுத்து, போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், சண்டிமாலின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 தகுதி நீக்கப் புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடத் தடையும், போட்டிக்கான ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பந்தைச் சேதப்படுத்திய புகாரில் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது களத்திற்கு வராமல், இலங்கை வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமிலேயே இருந்தனர். இதனால், இரண்டு மணி நேரம் போட்டி தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க