`இது பேரழிவை ஏற்படுத்தும்' - ஐசிசி விதிகளை எச்சரிக்கும் சச்சின் டெண்டுல்கர்!

``ஒரு நாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளைப் பயன்படுத்துவது பேரழிவுக்கான ஒன்று 'என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எச்சரித்துள்ளார். 

சச்சின்

டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிரிக்கெட் விதிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. ரசிகர்களைக் கவரும் வண்ணம் புதிய விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதிலும், அதிக ரன்கள் குவிக்க ஏதுவாக பவுண்டரி எல்லைகளைக் குறைப்பது, பந்துவீச்சாளர்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது எனப் புதிய விதிகள் பேட்ஸ்மேன்ஸ்களுக்குச் சாதகமாகவே விதிக்கப்படுகின்றன. இதனால் இரட்டைச் சதங்கள், 400 ரன்களுக்கு மேல் குவிப்பது என சர்வசாதாரணமாகத் தற்போது சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதற்கு உதாரணம்தான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்தது. போதாக்குறைக்கு டெஸ்ட் போட்டிகளை 5 நாளிலிருந்து 4 நாள்களாகக் குறைக்க நீண்ட காலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஐசிசியின் இந்த நடவடிக்கைகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒரு நாள் போட்டியில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவது பேரழிவுக்கான வழியே. அவ்வாறு பயன்படுத்தும் போது புதிய பந்துகள் பழைய பந்தாக மாற நேரம் கிடைக்காததுடன் ரிவர்ஸ் ஸிவிங்கும் ஆகாது. இப்போதெல்லாம் ஒருநாள் போட்டியின் டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸிவிங்கைப் பார்க்க முடிவதில்லை" எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!