தென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ! #WorldCup | Mexico vs South Korea match report

வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (23/06/2018)

கடைசி தொடர்பு:23:56 (23/06/2018)

தென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ! #WorldCup

உலகக் கோப்பை குரூப் F பிரிவு லீக் போட்டியில், தென் கொரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மெக்சிகோ. இதன்மூலம் அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை அந்த அணி பிரகாசப்படுத்திக்கொண்டது.

மெக்சிகோ

நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு முதல் போட்டியில் அதிர்ச்சியளித்த மெக்சிகோ அணி நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால், ஸ்வீடன் அணியுடனான போட்டியில் தோற்றதால் தென் கொரியா அணி பலமான நெருக்கடிக்கு மத்தியில் களமிங்கியது. ஆரம்பம் முதலே மெக்சிகோவின் ஆதிக்கம் இருந்தது. 

முதல் போட்டியைப் போலவே டிஃபன்ஸை அரணாக்கிய மெக்சிகோ, பாஸிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது. 26-வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் பாக்சுக்குள் செய்த ஹேண்ட் பாலால் மெக்சிகோ அணிக்கு பெனால்டி கிடைத்தது. அதை அணுபவ வீரர் கார்லோஸ் வேலா கோலாக்கினார். முதல் பாதி 1-0 என முடிவுக்கு வந்தது.

தென் கொரியா

இரண்டாவது பாதியில் தென் கொரிய வீரர்கள் அட்டாக்கிக் கேமைக் கையில் எடுத்தனர். அடிக்கடி மெக்சிகோவின் கோல் போஸ்டை முற்றுகையிட்டனர். அதிலும் குறிப்பாக நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஹியூங் மின் சன் சிறப்பாக விளையாடினார். பலமுறை கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டார். சமயம் எதிர்பார்த்துக் காத்திருந்த மெக்சிகோ கவுன்ட்டர் அட்டாக்கில் மாஸ் காட்டியது. 66-வது நிமிடத்தில் லெசோனோ கொடுத்த பாஸை ஜேவ் ஹெர்னாண்டஸ் கோலடிக்க மெக்சிகோ வீரர்கள் மிதப்பில் இருந்தார். ஆனால், ஸ்டாப்பேஜ் டைமில் பாக்சுக்கு வெளியே இருந்து ஒரு அற்புதமான கோலடித்தார் சன். ஆட்டத்தில் 2-1 என வென்ற மெக்சிகோ அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்துக்கிண்டது. 


[X] Close

[X] Close