ஜெர்மனியை வீழ்த்தியதால் தென்கொரியர்களுக்கு மெக்ஸிகோ விமானத்தில் டிஸ்கவுன்ட்! | Mexican Airline offers 20 per cent off on trips for South Koreans

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (28/06/2018)

ஜெர்மனியை வீழ்த்தியதால் தென்கொரியர்களுக்கு மெக்ஸிகோ விமானத்தில் டிஸ்கவுன்ட்!

ஜெர்மனியை வீழ்த்தியதால் தென்கொரியர்களுக்கு மெக்ஸிகோ விமானத்தில் டிஸ்கவுன்ட்!

தென்கொரியா தயவால் உலகக்கோப்பை தொடரில் நாக்அவுட் சுற்றுக்கு மெக்ஸிகோ முன்னேறியுள்ளது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் தென்கொரிய அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க, கையறு நிலையில் ஜெர்மனி தொடரை விட்டு வெளியேறியது. இந்த உலகக் கோப்பையில், ஆசிய அணிக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி என்று கருதப்பட்டாலும், தென்கொரியாவுக்குப் பெரிய பலன் எதுவும் இல்லை. உலகச் சாம்பியனை வென்ற திருப்தியோடு நாடு திரும்பலாம்.

Aeromexico

அதேவேளை, தென்கொரிய அணியின் வெற்றி மெக்ஸிகோ அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது. மெக்ஸிகோ அணி, கடைசி ஆட்டத்தில் 3 கோல்கள் வாங்கி ஸ்வீடன் அணியிடம் தோற்றது. எனினும், ஜெர்மனி வீழ்ந்ததால் எஃப் பிரிவில் இருந்து தலா 6 புள்ளிகள் பெற்ற ஸ்வீடனும் மெக்ஸிகோவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. தென்கொரியா உலகச் சாம்பியனை வீழ்த்தியதால், மெக்ஸிகோ சிட்டியில் நேற்று உற்சாகம் கரைபுரண்டோடியது. 

மெஸ்சிகோவில் கொண்டாட்டம்.

அங்குள்ள தென்கொரியத் தூதரகத்தின் முன் குவிந்த ரசிகர்கள், 'வீ  லவ் தென்கொரியா' , 'தேங்க்யூ தென்கொரியா ' என்று கோஷமிட்டனர். மெக்ஸிகோவுக்கான தென்கொரியத் தூதரை தோளில் சுமந்தும் ரசிகர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். இதற்கு அடுத்தபடியாக ஏர்மெக்ஸிகோ நிறுவனம், தென்கொரியாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மெக்ஸிகோ சிட்டி - சியோல் மார்க்கத்தில் 20 சதவிகிதம் கட்டணக்குறைப்புசெய்துள்ளது. ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.  டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க