100 மீட்டர் தூரத்தை 11.29 விநாடிகளில் கடந்து சாதனை படைத்த ஒடிசா தடகள வீராங்கனை!

தடகள வீராங்கனை டூட்டி சந்த், தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார். 100 மீட்டர் தூரத்தை 11.29 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 

தடகள வீராங்கனை டூட்டி சந்த்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 58-வது நேஷனல் இன்டெர் ஸ்டேட் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், அரையிறுதிச் சுற்றில் ஒடிசாவைச் சேர்ந்த வீராங்கனை டூட்டி சந்த் புதிய சாதனை படைத்துள்ளார். 

தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 11.29 விநாடிகளில் கடந்து, இலக்கை எட்டி புதிய சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன், 100 மீட்டர் தூரத்தை 11.30 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். இதுவே தேசிய சாதனையாகக் கருதப்பட்டது. ஆனால், அவரின் சாதனையை அவரே முறியடித்து, 100 மீட்டர் தூரத்தை 11.29 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதனால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேசியா தலைநகரில் நடைபெற உள்ள ஆசிய தடகளப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஏற்கெனவே, ஆசிய போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கு அவர் தேர்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!