சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி!

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நழுவவிட்டது. 

இந்திய அணி

photo credit : @TheHockeyIndia

37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வந்தது. இத்தொடரில் ஆரம்பத்தில் இருந்து அசத்திய இந்திய அணி எதிர்பார்த்தது போலவே, பைனலுக்குள் நுழைந்தது. ஆனால் நேற்று நடந்த பைனலில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதன்பயனாக 24வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பிளேக்கி கோவெர்ஸ் கோல் அடித்தார். இருப்பினும் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். 

ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீரர் விவேக் சஹார் ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்பின்னர் கோல் அடிக்க முனைப்பு காட்டிய இரு அணி வீரர்களின் முயற்சிகளிலும் பலிக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது பாதியில் இந்திய அணி வீரர்கள் நிறைய வாய்ப்புகளை வீணடித்தனர். பின்னர் பெனால்டி ஷூட் கொண்டுவரப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜொலிக்க, இந்திய வீரர்கள் சொதப்பினர். இதனால் பெனால்டி ஷூட்டின் இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. கோப்பையைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்திய அணி நழுவவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!