'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகள் அறிவிப்பு - ராகுல் டிராவிட்டை கௌரவப்படுத்திய ஐசிசி | Rahul Dravid inducted into the ICC Hall of Fame

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (02/07/2018)

கடைசி தொடர்பு:08:10 (02/07/2018)

'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகள் அறிவிப்பு - ராகுல் டிராவிட்டை கௌரவப்படுத்திய ஐசிசி

 இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது அறிவித்து ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது. 

டிராவிட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்திய கிரிக்கெட்டின்   `இரும்புக்கோட்டை' ,   `சுவர்' என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு வழங்க ஐசிசி முடிவுசெய்துள்ளது. ராகுல் டிராவிட் தற்போது, இந்திய இளையோர் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறார். 1996-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டிராவிட், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 

ஓய்வு பெற்ற பின்னும் இந்திய அணிக்காகப் பங்காற்றிவருகிறார். டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல, 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10,889 குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதைத் தட்டிச்செல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை டிராவிட் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி மற்றும் கபில்தேவ், கும்ப்ளே ஆகியோர் இந்த சிறப்பைப் பெற்றுள்ளனர். டிராவிட் உடன் இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதைப் பெற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை கிளாரி டெய்லர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க